மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி; முதல்வராகும் சிவராஜ் சிங் சவுகான்!

திங்கள், 23 மார்ச் 2020 (16:49 IST)
சிவராஜ் சிங் சவுகான் இன்று மாலை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும் அவர் தனது மெஜாரிட்டியை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி நிரூபிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 
 
இதன்படி முதல் அமைச்சர் கமல்நாத் தனது மெஜாரிட்டியை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இதனால் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. பாஜக சார்பில் முதலமைச்சர் பதவிக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முன்னாள் அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோரது பெயர்கள் பரிலீசனையில் இருந்தது. 
இந்தநிலையில், சிவராஜ் சிங் சவுகான் இன்று மாலை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்