சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். கட்சிகள் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை பெற்றுள்ளன என சரத்பவார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்., தேசியவாத காங்., சிவசேனா சார்பில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது சரத்பவார் பேசியதாவது, எங்கள் பக்கம் 156 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங். கட்சிகள் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை பெற்றுள்ளன.
சில சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது. பாஜகவுக்கு ஆதரவளிக்கும் அஜித்பவாரின் முடிவு, முற்றிலும் கட்சிக்கு எதிரானது, பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது. சுயேச்சை எம்எல்ஏக்களையும் சேர்த்து எங்கள் பக்கம் 170 எம்எல்ஏக்கள் உள்ளனர்