கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் அன்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை சித்திக் ராஜினாமா செய்தார். மேலும் துணை நடிகை அளித்த புகாரின் பேரில் சித்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, சித்திக் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.