கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன்: எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

ஞாயிறு, 22 மார்ச் 2020 (11:34 IST)
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்புக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று பெற்று வருபவர்கள் சிகிச்சைக்காக தேவைப்படும் பணத்தை கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் அவர்களுக்காக சிறப்பு ஒதுக்கீட்டின்படி கடன் அளிக்கத் தயாராக உள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
 
கொரோனா அவசர கால கடன் வழங்கும் திட்டம் வரும் ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தி கடன் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கடன் விண்ணப்பம் செய்த ஒரு மணி நேரத்தில் கடன் வழங்கப்படும் என்றும் வாங்கிய கடனுக்கு ஆறு மாதம் கழித்து வட்டி கட்டினால் போதும் என்றும், ஏற்கனவே வேறு வகை கடன் வாங்கியிருந்தாலும் இந்த சிறப்பு கடனை வாங்கலாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. 
 
எஸ்பிஐ வங்கியை அடுத்து வேறு சில வங்கிகளும் இதேபோன்ற கடன் வழங்க திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்