காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதையடுத்து கர்நாடகா கலவர பூமியாக மாறியுள்ளது. தமிழர்கள் மீது தாக்குதல், தமிழர்கள் உடமையல் மீது தாக்குதல் என வன்முறையின் உச்சத்தில் இருக்கிறார்கள் கன்னடர்கள்.
இந்நிலையில் அவர்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தை நியாயப்படுத்தும் விதமாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய புள்ளியியல் மற்றும் திட்டமிடுதல் துறை அமைச்சருமான சதானந்த கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனாலும், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுக்கின்றேன், சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்பானது தான் என அவர் கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் இந்த கருத்து சரியானது இல்லை என கூறப்படுகிறது.