ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்ததை சச்சின் பைலட்டும் நீக்கினார்.