பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி ஹெராயின் திடீர் மாயம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Mahendran

புதன், 1 மே 2024 (12:47 IST)
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் மாயமாகிவிட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இதுகுறித்து பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அடங்க 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த ஹெராயின் தற்போது காணாமல் போய் உள்ளதாகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் அரவிந்தாக்சன் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். 
 
இந்த காலகட்டத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவால் 70 ஆயிரத்து 772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ஆனால் தற்போது காணாமல் போன நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்க கோரி அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
 
இந்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள டெல்லி உயர் நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்