ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியம்….மாற்றுத் திறனாளி நபருக்கு MicroSoft-ல் வேலை !
புதன், 31 ஆகஸ்ட் 2022 (17:39 IST)
பார்வைத் திறன் குறைப்பாடுள்ள மாற்றுத்திறனாளி மென்பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் மைக்ரோசாஃப்டில் வேலை கிடைத்துள்ளது.
மத்திய பிரதேச மா நிலத்தைச் சேர்ந்த முழுப் பார்வைத்திறன் குறைப்பாடுள்ள ஒரு மாற்றுத்திறனாளி மென்பொறியாளர் யஷ் சோங்கியா. இவர் திரைவாசிப்பு மென்பொருள் உதவியால் கல்வியைப் பெற்றார்.
தற்போது, உலகின் முன்னணி நிறுவனமான பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்டில் ஆண்டிற்கு ரூ.47 லட்சம் ஆண்டு ஊதியத்துடன் வேலை கிடைத்துள்ளது.
இதுகுறித்து, யஷ் சோன் கியா கூறியதாவது: இலக்கை சாதிக்க உடலில் உள்ள குறைபாடுகள் தடையில்லை என்று மற்றவர்களுக்கு தன்னம்பிகை ஊட்டும் விதமாய் பேசியுள்ளார்.