வேலைக்கு விண்ணப்பித்த இளைஞரின் பெயரில் ரூ.250 கோடி மோசடி.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

Mahendran

புதன், 4 செப்டம்பர் 2024 (15:29 IST)
.உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்த நிலையில் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆனால் அந்த ஆவணங்களை வைத்து மர்மகும்பல் போலி நிறுவனம் ஒன்று தொடங்கி ரூ.250 கோடி மோசடி செய்திருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் அஸ்வினி குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வேலைவாய்ப்பு குறித்த செய்தி வந்ததை நம்பி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

அதற்காக தனது வீட்டின் மின் கட்டணம், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவர் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. மேலும் வேலைக்கு ரூபாய் 1750 பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

ஆனால் அவரது ஆவணங்களை தவறாக பயன்படுத்தி மர்ம நபர்கள் ஒரு வங்கி கணக்கை உருவாக்கி, போலியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, சுமார் 250 கோடி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணை செய்தபோது தான் வேலைக்கு விண்ணப்பித்த இளைஞர் அஸ்வினி குமார் ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்