குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Siva

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (20:08 IST)
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம்  அதாவது அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் 6,224 காலி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்திய நிலையில் இந்த தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் 432 மையங்களில் இந்த தேர்வு நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html  என்ற இணையதள பக்கத்தில் இந்த தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்