பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக ரூ.12 மதிப்பு கார்!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (08:19 IST)
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக ரூ.12 மதிப்பு கார்!
பிரதமர் மோடியின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு ரூபாய் 12 கோடி மதிப்புள்ள அதிநவீன கார் ஒன்றை மத்திய அரசு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்று உள்ள பிரதமர் மோடி அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களை தரவேண்டும் என்பதற்காக அதிநவீன கார் ஒன்றை வாங்க பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் 
 
இந்த கார் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது என்றும், ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டு துளைக்காத அளவுக்கு பாதுகாப்பு கொண்டது என்றும் கூறப்படுகிறது
 
2 மீட்டர் தூரத்தில் 15 கிலோ வெடி மருந்து இருந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு எந்த சத்தமும் கேட்காது என்றும் கார் கண்ணாடிகள் அனைத்தும் பாலிகார்பனேட் பூசப்பட்டுள்ளதால் விஷவாயு தாக்குதல் ஏற்பட்டாலும் காரில் இருப்பவர்களுக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்றும் கூறப்படுகிறது 
 
மணிக்கு 160 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த கார் டயர் பஞ்சரானால் காற்று வெளியேறாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்