’டான்’ டப்பிங்கை முடித்த எஸ் ஜே சூர்யா!

திங்கள், 27 டிசம்பர் 2021 (15:30 IST)
டான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் இப்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மாநாடு படத்துக்கு பிறகு எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. இது சம்மந்தமாக எஸ் ஜே சூர்யா டிவிட்டரில் ‘டான் படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் என ஒவ்வொரு நாளையும் மிகவும் ரசித்து வேலை செய்தேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்