இதையடுத்து கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் ,மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டுள்ளது என்றும் லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி லாபம் கிடைக்கும் வகையில், அவருக்கு சாதகமாக மதுபான கொள்கையில் திருத்தம் செய்து முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு நடந்த போது கெஜ்ரிவால் 170 மொபைல் போன்களை பயன்படுத்தி உள்ளார் என்று அமலாக்கத் துறையினர் கூறியுள்ளனர். சோதனை மற்றும் விசாரணையின் போது, தற்போது பயன்படுத்தும் மொபைல்போனின் கடவுச்சொல்லை கேட்ட போதும் கெஜ்ரிவால் அதனை தர மறுக்கிறார் என்றும் ஆவணங்களில் உள்ளவற்றுக்கு முரணாக பதில் அளிக்கிறார்? என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.