இந்த நிலையில் விதிகளை மீறியதாக ஐசிஐசிஐ வங்கிக்கு ஒரு கோடியும் யெஸ் வங்கிக்கு 91 லட்சமும் அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவர பராமரிக்காமல் இருந்தது, வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்புதொகை பராமரிக்காமல் இருந்ததற்கு அபராதம் விதித்தது ஆகிய விதிகளை மீறியதாக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.