பயணிகளுக்கு உதவும் ரோபோ: அசத்தும் விமான நிலையம்

வெள்ளி, 30 மார்ச் 2018 (11:27 IST)
பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் எல்லா தகவலையும் தனது நினைவில் வைத்துக் கொண்டு அதை தேவையான நேரத்தில் பயன்படித்தும் நினைவாற்றல் கொண்ட வகையில் ரோபோ ஒன்று வடிவமைக்க பட்டிருக்கும்.
 
அதே போல பெங்களூரு விமான நிலையத்தில், பயணாளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் கெம்பா என்ற ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது. இந்த ரோபோவால் உள்ளூர் தகவல்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்