சிறுநீர் கழிக்க மாநில எல்லையை தாண்டும் பெண்களின் அவலநிலை

புதன், 23 ஆகஸ்ட் 2017 (23:34 IST)
தமிழக கேரள எல்லையில் இருக்கும் கூடலூர் வழியாகத்தான் தேக்கடி, குமுளி, சபரிமலை ஆகிய நகரங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த ஊர் வழியாக சென்றபோதிலும் கூடலூர் நகரம் பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் உள்ளது. 



 
 
பேருந்து நிலையம் உள்பட அடிப்படை வசதியின்றி வாழும் இப்பகுதி மக்களுக்காக பொதுக்கழிப்பிடம் கூட இல்லை. ஆண்கள் எப்படியோ சமாளித்துவிடுகின்றனர். ஆனால் பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் அவர்கள் சிலதூரம் நடந்து கேரள எல்லையில் உள்ள பேருந்து நிலையத்தின் கழிப்பிடத்தையோ அல்லது அங்குள்ள ஓட்டல்களில் உள்ள கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
 
சிறுநீர் கழிப்பதற்காக ஒரு மாநிலத்தின் எல்லையை தாண்ட வேண்டிய அவல நிலை குறித்து அப்பகுதி அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே இந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்