3 வருசம் ஆனாலும் இந்த இட்லி, உப்புமாலாம் கெடாதாம்...

சனி, 9 பிப்ரவரி 2019 (17:55 IST)
வழக்கமாக இட்லி, உப்புமா போன்ற உணவுகளை கண்டால் எரிச்சலாய் வரும். இப்போது இந்த இட்லி, உப்புமா போன்ற உணவுகள் எல்லாம் 5 வருடம் வரை கெடாமல் இருக்குமாம். 
 
ஆம், இப்படி ஒரு ஆராய்ச்சியைதான் நடத்தி இருக்கிறார்கள் மும்பையில். மும்பையை சேர்ந்த இயற்பியல் பேராசிரியை 3 ஆண்டுகள் வரை அவித்த பொருட்கள் கெட்டுப்போகமல் பதப்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார். 
 
மும்பை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வரும் இவர், 15 வருட தொடர் ஆராய்ச்சிக்கு பின்னர் புதிய பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால், அவித்த பொருட்களான இட்லி, உப்புமா போன்ற உணவுகளை 3 ஆண்டுகள் வரை பதப்படுத்த முடியும். 
 
இவ்வாறு பதப்படுத்துவதால் உணவு பொருட்களின் சுவை மற்றும் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. மேலும் பதப்படுத்தலுக்கு எந்த ரசாயன பொருட்களும் பயன்படுத்தபடமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்