ரெப்போ ரேட் 4.90% ஆக உயர்வு: பாதிப்பு என்னென்ன?

புதன், 8 ஜூன் 2022 (12:32 IST)
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.40 சதவீதத்திலிருந்து 4.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 50 புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தி உள்ளதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதிக வட்டியுடன் தவணை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது 
 
வீட்டுக்கடன், வாகன கடன், பர்சனல் கடன் ஆகியவை வாங்கி பலர் மாதத்தவணை மூலம் கட்டி வருகின்றனர். அவர்களுக்கு இந்த வட்டி விகிதம் மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. வங்கியில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் இனி அதிக அளவு பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கடந்த மாதம் 40 புள்ளிகள் வட்டிவிகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 50 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்