10 லட்சம் குடும்பங்களுக்கு தடுப்பூசி வழங்கிய ரிலையன்ஸ் !

திங்கள், 26 ஜூலை 2021 (23:07 IST)
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும்  தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா  3 வது அலை பரவும் அபாயமுள்ளதால் இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும்,  விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும்  தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், இந்தக் கொரொனா காலத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸில், தினமும் 1 லட்சம் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதல், முகக்கவசம் அளித்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்