ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசாகப்பட்டினம் செல்ல தயாராக இருந்தது அந்த ஏர் இந்தியா விமானம். இந்நிலையில் அந்த விமானத்தில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்துவிட்ட ஊழியர்கள் அதனைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவோ முயன்றும் அத்தனை பேரையும் ஏமாற்றி தப்பித்துள்ளது அந்த எலி. இதனால் காலை 6 மணிக்கே புறப்படவேண்டிய விமானம் தாமதமாகிக் கொண்டே மாலை வரை புறப்படவில்லை. இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்..