தேர்தல் நடக்கும் நேரத்தில் திடீரென கூட்டணியில் பிளவு ஏற்படும் ஏற்படுவதும், கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகிச் செல்வதும், புதிதாக கட்சிகள் கூட்டணியில் இணைவதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது
அந்த வகையில் பீகார் மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பீகார் மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் போட்டியிடவில்லை என ஜனதா கட்சியின் பொதுச்செயலாளரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது