ஆகாசா ஏர்லைன்ஸ் உரிமையாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்!

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (11:18 IST)
ஆகாசா ஏர்லைன்ஸ் உரிமையாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்!
பிரபல தொழிலதிபரும் பங்குச்சந்தை நிபுணருமான  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று போற்றப்படுபவரும் ஆகாச ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று காலமானார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கிய போது  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நேரில் வந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
 
மறைந்த அவர்களுக்கு வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது.   ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு சுமார் 5.5 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது
 
 ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் அறிக்கையில் இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வத்துடன்  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்ததாகவும் அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்