இந்திய எல்லையில் சீன கிராமம்: ராஜீவ் காந்தி தான் காரணம் என பாஜக எம்பி குற்றச்சாட்டு!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (12:38 IST)
இந்திய எல்லையில் சீன கிராமம்: ராஜீவ் காந்தி தான் காரணம்
இந்திய எல்லையில் சீனா புதிதாக கிராமம் அமைந்துள்ளதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான் காரணம் என பாஜக எம்பி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அருணாச்சல மாநிலத்தின் எல்லையில் சீனா புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்கி உள்ளது என்பது சமீபத்தில் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இது குறித்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் எல்லையில் சீனாவின் புதிய கட்டுமானத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே காரணம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தபீர் காவ் என்பவர் குற்றஞ்சாட்டியுள்ளார்
 
கடந்த 1980களில் இருந்து இந்த பகுதியில் சீனா சாலைகளை அமைத்து வருவதாகவும் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சீனா சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது தடுக்கவில்லை என்றும் அப்பொழுது முதல் இந்த பகுதி சீனாவின் கைவசம் தான் இருக்கிறது என்றும் அவர் உள்ளார் கூறியுள்ளார்.
 
சீன ஆக்கிரமிப்புகளை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தடுத்திருந்தால் இன்று சீனா இந்த கிராமத்தை உருவாக்கி இருக்காது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்