டெல்லியில் ரஜினிகாந்த் நடத்திய திரைமறைவு அரசியல்.. வெளிவராத உண்மை..!

Mahendran

புதன், 12 ஜூன் 2024 (13:57 IST)
டெல்லியில் பாஜக ஆட்சி பிரச்சினை இல்லாமல் அமைவதற்காக ரஜினிகாந்த் திரை மறைவு வேலைகளை பார்த்ததாகவும் அதனால்தான் அவருக்கு டெல்லியிலும் ஹைதராபாதத்திலும் ராஜமரியாதை கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைத்திருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடு ஆரம்பத்தில் பல துறைகளைக் கேட்டு பாஜக தலைமைக்கு சவாலாக இருந்ததாகவும் அப்போது பாஜக தலைமை ரஜினி இடம் தொடர்பு கொண்டு சந்திரபாபு நாயுடுடன் பேசி நிபந்தனை இன்றி ஆதரவு அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறியதாகவும் தெரிகிறது. 
 
இதனை அடுத்து தான் தனது 30 ஆண்டுகால நண்பர் சந்திரபாபு நாயுடு இடம் ரஜினிகாந்த் பேசியதாகவும் ரஜினிகாந்த் கோரிக்கையை அடுத்து சந்திரபாபு சந்திரபாபு நாயுடு இறங்கி வந்து பாஜகவுக்கு நிபந்தனை இன்றி ஆதரவு அளிக்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து டெல்லியில் ரஜினிகாந்துக்கு ராஜமரியாதை கிடைத்த நிலையில் இன்று நடைபெற்ற சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிலும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்