குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்த ராஜஸ்தான் தாய்

ஞாயிறு, 2 ஜூலை 2017 (19:10 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்துள்ளார்.


 

 
ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் ஜுன் 30ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த ஜிஎஸ்டி வரியைக் கண்டு நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயர் வைத்துள்ளார்.
 
அந்த பெண்ணுக்கு ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு மேல் குழந்தை பிறந்துள்ளது. அப்போதுதான் மத்திய அரசு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்தது. இதனால் அந்த பெண் தனது குழந்தைக்கு ஜிஎஸ்டி என பெயரிட்டுள்ளார்.
 
இதற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்