ராஜஸ்தானில் லாரி ஓட்டுனர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதற்கு போலீஸார் ரூ.1,41,000 அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், அபராத கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளனர். இந்த புதிய விதிகளின் படியே போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் லாரி ஓட்டுனர் ஒருவரிடம் சாலை விதிகளை மீறியதற்கு ரூ.1,41,000 அபராதம் விதித்துள்ளனர்.
லாரியில் அதிக எடையை ஏற்றி என்றதற்கு ரூ.1 லட்சமும், விதி மீறலுக்காக ரூ.41,000 அபராதம் விதிக்கப்படுள்ளது. அந்த அபராத தொகையை லாரி ஓட்டுனர் செலுத்தி உள்ளார். இருப்பினும், அந்த ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.