அந்த அறிவிப்பின்படி மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.