பாஜக தலைமையில் வலுவான கூட்டணி!-பாஜக தேசிய பொதுச்செயலாளர்

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (20:55 IST)
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியது.

இந்த நிலையில் சமீபத்தில்  பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,   ‘’2024-ல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்  அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதற்கு வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி’’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ்'' தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால் சிறிது காலதாமதம் ஆகலாம்''. என்று கூறியுள்ளார்.

மேலும், ''பாஜக இதுவரை பெறாத அளவுக்கான வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற வேண்டும்…தென் தமிழ் நாட்டில் வலுவான உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இணையவுள்ளன என்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்