பதஞ்சலியின் கொரோனா மருந்து விற்றால் நடவடிக்கை! – அமைச்சர் எச்சரிக்கை!

வெள்ளி, 26 ஜூன் 2020 (08:30 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இயலாமல் உலக நாடுகள் திணறி வரும் சூழலில் கொரோனா மருந்து என பதஞ்சலில் மருந்து ஒன்றை விற்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான மருந்து என கொரோனில் மற்றும் சுவாசரி என்ற இரண்டு மருந்துகளை விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் இந்த மருந்துகள் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாதவை. இந்த மருந்துகளை ஆய்வு செய்ய கூறப்பட்டிருக்கும் நிலையில் இந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் எனவும் பலர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சுகாதார துறை அமைச்சர் ரகு சர்மா “பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விற்கும் கொரோனா மருந்துகள் அரசின் சான்று பெறாதவை. எனவே அதை விற்பனை செய்வது குற்றமாகும். ராஜஸ்தானில் பதஞ்சலியின் கொரோனா மருந்துகள் விற்கப்பட்டால் விற்பவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்