மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது புறநானூறு பாடல் ஒன்றை பாடி, அதன் விளக்கத்தை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் விளக்கி, அதனோடு பட்ஜெட்டில் போடப்பட்டுள்ள வரியையும் ஒப்பீடு செய்தார். அவருடைய இந்த உதாரணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழில் இவ்வளவு அருமையான பாடல்கள் இருக்கின்றதா? என உறுப்பினர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
என்ற திருக்குறளை சுட்டிக்காட்டிய ஆ.ராசா அதன் பொருளை கூறியபோது, உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும் என்றும், ஆனால் என்னைப் பொருத்தவரை, இந்த நான்கு அம்சங்களில் இந்த பட்ஜெட் முற்றிலும் தோல்வியுற்றுவிட்டது என்றும் கூறினார்.