மார்க்கெட்டிங் செய்ய கொடுத்து அனுப்பப்பட்ட ரூ.1.29 கோடி மதிப்பு தங்க நகைகள்.. எஸ்கேப் ஆன மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்

Siva

வெள்ளி, 25 ஜூலை 2025 (17:01 IST)
ஆந்திரப் பிரதேசத்தில், பிரபல நகைக்கடை ஒன்றின் மார்க்கெட்டிங் ஊழியர், சுமார் ரூ. 1.29 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் தலைமறைவாகி, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் உள்ள க்ரிஷ் டயமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி என்ற நிறுவனத்தில் ஒருவர் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிந்து வந்துள்ளார். மற்ற கடைகளுக்கு நகைகளை காண்பித்து, விற்பனை செய்வதற்காக அவரிடம் ரூ. 1.29 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை நகைக்கடை நிர்வாகம் கொடுத்து அனுப்பியுள்ளது.
 
இந்த நிலையில், மார்க்கெட்டிங் ஊழியருக்கு அந்த தங்க நகைகளைக் கண்டதும் ஆசை வந்துள்ளது. அவர் நகைகளுடன் தலைமறைவாகி விட்டார். இதை அறிந்த நகைக்கடை நிர்வாகம் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான அந்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர்.
 
காவல்துறையின் துரித நடவடிக்கையின் காரணமாக, வழக்கு பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த மார்க்கெட்டிங் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட மொத்த நகைகளும் மீட்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்