ரயில் பயணிகளுக்கு பிரத்யேக டெபிட் கார்டு: புதிய அறிமுகம்

புதன், 3 ஜனவரி 2018 (04:32 IST)
ரயில்வே துறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து ஏற்கனவே கிரெடிட் கார்டுகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ரயில் பயணிகளின் வசதிக்காக டெபிட் கார்டும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் ரயில் டிக்கெட்டுக்களை எடுக்கும்போது டிஜிட்டல் பரிவர்த்தனையில் சுற்றுலா பயணிகள் ஈடுபடலாம். இந்த டெபிட் கார்டுகள் வாங்குவோர்களில் மாதம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 100% கேஷ்பேக் அளிக்கும் சலுகையையும் அமல்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவர ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

ரயில்வே கிரெடிட் கார்டு போன்று ரயில்வே டெபிட் கார்டுகளுக்கும் ரெகுலர் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று   எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்