கேன்சல் செய்த டிக்கெட்டுகளால் 9000 கோடி வருவாய் பார்த்த ரயில்வே!!

Arun Prasath

புதன், 26 பிப்ரவரி 2020 (17:35 IST)
டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.9000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுஜித் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ரயில்வேத்துறை பதிலளித்துள்ளது. அதன் படி, கடந்த 2017-2020 ஆம் ஆண்டு வரையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டிக்கெட்டை கேன்சல் செய்யாதவர்களிடம் இருந்து 4335 கோடி ரூபாயை ரயில்வே துறை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல், டிக்கெட் உறுதி செய்யப்பட்டு அதன் பிறகு கேன்சல் செய்யப்பட்டதன் மூலம் 4684 ரூபாய் வருவாயாக ஈட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலும் ஏசி 3ஆவது கிளாஸ் டிக்கெட்டுகளில் பயணம் செய்பவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்