விமான நிலையத்தில் போர்டிங்டைம் என இருப்பது போல், ரயில் நிலையங்களிலும் ரயில்கள் புறப்படுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வரவேண்டும். அதன் பிறகு, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற புதிய திட்டத்தை நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 202 ரயில் நிலையங்களில் அமல் படுத்த ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது.
பெரும்பாலான பெரிய ரயில் நிலையங்களின் உள்பகுதியில் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இப்படி இருக்கும்போது, எந்த ரயிலுக்கான பயணிகள் என உடனடியாக கண்டறிவதில் சிக்கல் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ரயில் நிலையங்களில் உள்ளே செல்லவும், வெளியேறவும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கின்றன.