முடங்கிய ராகுல்காந்தி ட்விட்டர் கணக்கு! – காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு!

ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (10:26 IST)
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி tஹனது ட்விட்டர் கணக்கு மூலமாக தனது கருத்துகளை பகிர்ந்து வந்ததுடன், மத்திய அரசின் செயல்பாடுகளையும் கண்டித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் தற்காலிகமாகவே இந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வழக்கம்போல செயல்படும் என்றும், அதுவரை மற்ற சமூக ஊடகம் மூலமாக ராகுல்காந்தி தொடர்ந்து தனது கருத்தை பகிர்வார் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்