ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பாஜக வுக்கு எதிராக வந்துள்ளன. பாஜக கோட்டையாக திகழ்ந்து வந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களும் காங்கிரஸ் வசம் சென்றுவிட்டது. மேலும் மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வாக்குகளைக் கூடப் பெற வில்லை. மோடி அலை ஓய்ந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முதலமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். பதவியேற்றதும் மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற கமல்நாத் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துவிட்டோம். விரைவிலேயே அடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என கூறி 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வந்த பாஜகவிற்கு இந்த கடன் தள்ளுபடி செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.