இந்திய ஒற்றுமை பயணம் ஒருபோதும் நிறுத்தப்படாது: காங்கிரஸ் திட்டவட்டம்

வியாழன், 22 டிசம்பர் 2022 (21:43 IST)
இந்திய ஒற்றுமை பயணம் ஒரு போதும் நிறுத்தப்படாது என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதனால் இந்திய ஒற்றுமை பயணத்தை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொண்டது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அவர்கள் இதுகுறித்து கூறிய போது கொரோனா குறித்த அனைத்து வழிகாட்டல்களையும் காங்கிரஸ் பின்பற்றும் என்றும் ஆனால் ஒருபோதும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறுத்தப்படாது என்றும் கூறினார்
 
 இந்திய ஒற்றுமை பயணத்திற்கு விதிமுறைகளை கடைபிடிக்க மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த பதிலை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்