புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்: மத்திய உள்துறை செயலாளர்

திங்கள், 11 மே 2020 (10:31 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே செல்கின்றனர். தொழிலாளர்கள் நடந்து செல்லும் வழியில் விபத்துகளை சந்தித்தும், உடல்நல கோளாறு காரணமாகவும் ஒரு சிலர் உயிரிழந்து வருகின்றனர்
 
இதனை அடுத்து வெளி மாநிலத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வெளிமாநில தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருவதாகவும் இந்த சிறப்பு ரயில்களுக்கு மாநில அரசுகள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது
 
மேலும் சமீபத்தில் மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் தொழிலாளர்கள் சிலர் பலியானதன் எதிரொலியாக இந்த அறிவுறுத்தல் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தனியார் மருத்துவமனையில் இயங்குவதை தடை செய்ய வேண்டாம் என்றும் மருத்துவ பணியாளர்கள் பணிக்கு செல்வதை தடை செய்ய வேண்டாம் என்றும் மத்திய உள்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் நடந்தே சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது எதிர்பாராத விதமாக வந்த சரக்கு ரயில், தூங்கியவர்கள் மீது ஏறி ஏதாவது 11 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் இது போன்ற இன்னொரு சம்பவம் ஏற்படக்கூடாது என்பதற்காக நடந்து செல்வதை தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்