ராகுல் காந்திக்கு 200 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி.. என்ன காரணம்?

Siva

வியாழன், 6 மார்ச் 2025 (08:30 IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, லக்னோ நீதிமன்ற நீதிபதி 200 ரூபாய் அபராதம் விதித்ததாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில், வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை  லக்னோ நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய விசாரணையின் போது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதனை அடுத்து, அவர் ஆஜராகாத காரணத்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தி அன்றைய தினம் ஆஜராவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்