ராகுல்காந்தியின் உண்மையான பெயர்: போட்டு உடைத்த சுப்பிரமணியம்சுவாமி

சனி, 13 ஏப்ரல் 2019 (10:20 IST)
நேரு குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களது பெயருக்கு பின்னால் 'காந்தி' என்று போட்டு கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்திரா காந்தி, ராகுல்காந்தி, சஞ்சய்காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, வருண் காந்தி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது
 
இந்த நிலையில் ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது எடுத்த மார்க் ஷீட்டினை தற்போது பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் ராகுலின் பெயர் ராகுல்வின்சி என்று உள்ளது. இதனால் ராகுல்காந்தியின் உண்மையான பெயர் ராகுல்வின்சி தான் என்று சுப்ப்பிரமணியம்சுவாமி  குறிப்பிட்டுள்ளார்.
 
அதுமட்டுமின்றி ராகுல்காந்தி எம்.பில் படிப்பில் ஒரு பாடத்தில் பெயில் ஆகியுள்ளதையும் சுப்பிரமணியம்சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கை என்ற பாடத்தில் ராகுல்காந்தி 58% ,மதிப்பெண்களை மட்டுமே எடுத்துள்ளார். 60% எடுத்தால் மட்டுமே பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் நிலையில் சுப்பிரமணியம்சுவாமியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Buddhu’s Cambridge Certificate says his name is Raul Vinci and he read MPhil and failed in National Economic Planning & Policy pic.twitter.com/22kBHSRbcR

— Subramanian Swamy (@Swamy39) April 12, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்