கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல், பிரியங்கா விலகல்! – காங்கிரஸில் பரபரப்பு!

ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:30 IST)
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து ராகுல்காந்தி விலக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் தேசிய கட்சியான காங்கிரஸ் கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைவான தொகுதிகளையே வென்றது. பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸை ஆம் ஆத்மி வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ளது.

இதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததன் காரணம் குறித்து நாளை காங்கிரஸ் செயற்குழு கூடி விவாதிக்க உள்ளது. இந்த செயற்குழுவில் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தங்களது பொறுப்புகளிலிருந்து விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்