கோபத்தில் ஜியோ டவரை நாசமாக்கும் விவசாயிகள்! – பஞ்சாப் எச்சரிக்கை!

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (14:44 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் விவசாயிகள் ஜியோ செல் டவர்களை நாசமாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே அரசு இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், பொருட்களை கண்டால் துவம்சம் செய்து விடுகின்றனர்.

இதனால் பஞ்சாபில் இதுவரை 1,561 ஜியோ செல்போன் டவர்களை விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளதாகவும், ஜியோ நிறுவன ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து செல்போன் டவர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்