பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

Siva

ஞாயிறு, 18 மே 2025 (09:28 IST)
இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உருவாக்கிய பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
 
இந்த ராக்கெட்டில், புவி கண்காணிப்புக்காக புதிய இஒஎஸ்-09 செயற்கைக்கோள் (ரிசாட்-1பி) ஏற்றப்பட்டிருந்தது. ஆரம்ப கட்டமாக, ராக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகள் வெற்றிகரமாக பிரிந்தன. ஆனால், மூன்றாவது பகுதி பிரியும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இந்த முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.
 
இஸ்ரோ இதற்கான காரணங்களை முழுமையாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இதற்கு முன்னதாக கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல செயற்கைக்கோள்கள் புவியின் மேல்நிலைகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயலில் உள்ளன. ஆனால் இந்த புதிய ரிசாட் வகை செயற்கைக்கோள் முயற்சி தோல்வி அடைந்தது. 
 
தொடர்ந்து சரிபார்ப்புகள் நடந்து வரும் நிலையில், எதிர்கால ராக்கெட் ஏவுதொடர்களுக்கு இந்த அனுபவம் உதவக்கூடியதாக அமையும் என நம்பப்படுகிறது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்