அதை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அவர்கள் சஸ்பெண்டை ரத்து செய்யும் வரை போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 2 வது நாளாக தர்ணா செய்து வந்தன 8 எம்.பிக்கள். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். பின்னர், மாநிலங்களவை தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் அறிவித்தார். இந்த அறிவிப்பால மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.