ஜிஎஸ்டி கட்டாத நிறுவனங்கள் சொத்துக்கள் முடக்கப்படும்! – சுங்கவரி வாரியம் உத்தரவு

சனி, 28 டிசம்பர் 2019 (11:37 IST)
மத்திய அரசுக்கான ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க மத்திய சுங்கவரி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில் பல நிறுவனங்கள் ஜி.எஸ்.டி கணக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தாமல் இழுபறி செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பினாலும் அலட்சியமாக நிறுவனங்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி கணக்கை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத நிறுவனங்களின் வங்கி கணக்கு மற்றும் சொத்துகளை முடக்க மத்திய மறைமுக மற்றும் சுங்கவரி வாரியம் ஜி.எஸ்.டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஜிஎஸ்டி செலுத்த வேண்டிய கடைசி நாளுக்கு 3 நாட்கள் முன்னதாக நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும். காலக்கெடு முடிந்தும் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால் 5 நாட்களுக்கு பிறகு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும்,. அதற்கு பிறகும் அலட்சியம் காட்டினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்