காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ரா நகரில் திடீரென கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காவல்துறையினர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் போலீசாரின் தடையையும் மீறி பிரியங்கா காந்தி லக்னோ செல்ல முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சென்றதாகவும், ஆனால் பிரியங்கா காந்தி லக்னோ நகருக்குள் செல்லக்கூடாது என போலீசார் தடுத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் போலீசாரின் அறிவுறுத்தலை மீறி பிரியங்கா காந்தி முயன்றதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.