பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்..! 3-வது முறையாக வாரணாசியில் போட்டி..!!

Senthil Velan

செவ்வாய், 14 மே 2024 (12:34 IST)
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
18வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 7வது கட்டமாக வருகிற ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 
 
வாரணாசி தொகுதியில் கடந்த இரண்டு முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையும் பிரதமர் மோடி வாரணாசியில் களமிறங்கியுள்ளார். இதற்காக வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ALSO READ: முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..! வழக்கத்தை விட அதிகளவில் மழைக்கு வாய்ப்பு...!
 
முன்னதாக கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, வாகனப் பேரணியில் ஈடுபட்டவாறே பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்