ஹாத்ரஸ் சம்பவம்: பிணங்கள் குவிவதைப் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் போலீஸ்காரர் பலி!

Siva

புதன், 3 ஜூலை 2024 (11:41 IST)
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹாத்ரஸ் என்ற இடத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இதுவரை 116 பேர் உயிரிழந்த நிலையில் அடுக்கடுக்காக குவியும் பிணங்களை பார்த்த காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை ஹாத்ரஸ் பகுதியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து  கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர் ரவி யாதவ் என்பவர் வரிசையாக பிணங்கள் குவிந்து கொண்டு இருந்ததை பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்தார்.

அதனை அடுத்து அவர் மயங்கி விழுந்ததாகவும் உடன் இருந்த காவலர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிகிறது. ஆனால் ரவி யாதவ் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

மறைந்த ரவி யாதவுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்