ஆசிரியர்களுக்கு வைத்த தண்ணீரை குடித்த மாணவன் மீது சாதி வன்கொடுமை : ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (14:15 IST)
ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்த மாணவன் மீது சாதி வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்காக தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த தண்ணீரை ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் குடித்ததாக அந்த மாணவன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
அந்த மாணவன் பட்டியலினத்தை சேர்ந்த மாணவன் விசாரணை தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கொடூரமாக தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் அந்த மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர் 
 
புகாரை திரும்ப பெற இரண்டு லட்சம் வழங்குவதாகவும் இக்கோரிக்கையை ஏற்காவிட்டால் மோசமான விளைவு ஏற்படும் என்றும் தலைமை ஆசிரியர் எச்சரித்ததாகவும் மாணவரின் சகோதரர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்