மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸார்: மனித உரிமை ஆணையம் கண்டனம்

வியாழன், 15 பிப்ரவரி 2018 (12:55 IST)
சாலையில் படுத்திருந்த மாற்றுத்திறனாளியை போலீஸார் அப்புறப்படுத்த நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.



ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்சத்பூரில் சாலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் விடிந்தது தெரியாமல் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற போலீசார் மாற்றுத்திறனாளியை உடனடியாக எழுந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவருக்கு முழங்கால் பகுதி வரை ஒருகால் இல்லாததால் அவரால் எழுந்து செல்ல முடியவில்லை. இதனால் போலீஸார் அவரை அடித்து இழுத்துச்சென்று சாலையோரம் தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் போலீஸார் தாக்குதலால் மாற்றுத்திறனாளிக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்